கிணற்றில் குளிக்க சென்ற சிறுமி நீரில் மூழ்கி பலி தோழிகள் கண்எதிரே நடந்த சம்பவம்

சென்னை

தாம்பரம், டிச.2: வயல் வெளியில் உள்ள கிணற்றில் குளிக்கசென்ற 16வயது சிறுமி நீரில் மூழ்கிபலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- சென்னை தாம்பரம் அடுத்த அகரம்தென் குறிஞ்சி நகர் பகுதியில் சேலத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தனது மகள் நந்தினியுடன் (வயது16) தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். நந்தினி அப்பகுதியில் உள்ள வயல்வெளி கிணற்றில் தனது தோழிகளுடன் துணி துவைப்பதற்க்காக செல்வது வழக்கம் அது போல் இன்று காலை தனது தோழிகளுடன் நந்தினி துணி துவைப்பதற்கு சென்றுவிட்டு கிணற்றில் இறங்கி குளிக்க முயன்றுள்ளார் .தற்போது கன மழை பெய்து வருவதால் கிணறு முழுவதும் தண்ணீர் இருந்த நிலையில் சரியான நீச்சல் பயற்ச்சி இல்லாத நந்தினி நீரில் மூழ்கினார்.

அப்போது தன்னை காப்பாற்றுமாறு தனது தோழிகளிடம் கூறியிள்ளார் ஆனால் காப்பாற்ற முயற்சி செய்தனர் ஆனால் நந்தினி நீரில் மூழ்கி பலியானார். இதனை கண்ட தோழிகள் கூச்சலிட்டதால் அப்பகுதிமக்கள் தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர் .சம்பவ இடத்திற்க்கு வந்த தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் வழக்கு பதிவு செய்த சேலையூர் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.