முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ தனிக்கட்சி தொடங்கினார்

தமிழ்நாடு

புதுவை, டிச.2: முன்னாள் எம்எல்ஏ மனோகர் புதுச்சேரி பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- புதுச்சேரி காங்கிரஸ் அரசு மக்களை பற்றி கொஞ்சம் கூட கவலை படுவதில்லை தொடர்ந்து புதுச்சேரி மக்களை வஞ்சித்து ஏமாற்றி துரோகம் செய்து வருகிறது. இதை கேள்வி கேட்க யாரும் முன்வருவதில்லை போராளிகள் என்று சொல்லும் கட்சிகளும் காங்கிரஸ் கூட்டணியில் மாட்டிக் கொண்டு மௌனமாக உள்ளனர்.புதுச்சேரி மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி சீரழிந்துவிட்டது ஆளுநர், முதல்வர் இருவரும் யாருக்கு அதிகாரம் என்ற சண்டையில் முதல்வர் மக்களை மறந்து விட்டார்கள் .மூன்றரை ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் மக்கள் முழுமையாக ஏமாற்றப்பட்டு உள்ளனர். இதனால் புதுச்சேரி மக்களின் நலனுக்காக புதிய அரசியல் கட்சியும் கட்சியின் கொள்கை கட்சியின் கொடி ஆகியவற்றை விரைவில் வெளியிடுவேன். இவ்வாறுஅவர் கூறினார்.