சென்னை, டிச.2 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்காமல் கிராமப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து திமுக அதிருப்தி தெரிவித்துள்ளது, இது குறித்து திமுக தலைவர் மு.க,ஸ்டாலின் புதுச்சேரியில் நிருபர் களிடம் கூறுகையில், மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமியா? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியா? என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு இந்த அறிவிப்பு உள்ளது என்றார். திமுக பொருளாளர் துரைமுருகனும் இதே கருத்தை வெளியிட்டுள்ளார்.