ரூ.8 லட்சம் மதிப்பில் கலையரங்க கட்டிடம் நரசிம்மன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

தமிழ்நாடு

திருத்தணி, டிச.2: ஆர்.கே.பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு எம்எல்ஏ நிதியிலிருந்து ரூ.8 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதால் அதற்கான அடிக்கல் நாட்டு விழா பி.எம்.நரசிம்மன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. திருத்தணி அதிமுக எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஆர்.கே.பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  ரூ.8 லட்சம் மதிப்பீட்டில்  கலையரங்கம் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பி.எம்.நரசிம்மன் எம்எல்ஏ பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் ஜெ.பாண்டுரங்கன், பலராமன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஜெயராமன்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தரணி நாராயணன், வழக்கறிஞர் கோபால், ராஜாநகரம் சேகர்,தலைமை ஆசிரியர் பாண்டியன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.