லக்னோ, டிச.2: சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் ஆண்கள் பிரிவில் தைபேயின் வாங், மகளிர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் ஆகியோர் சாம்பியன் பட்டத்தை தட்டித்தூக்கினர்.

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் கீழ் நடந்த இறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயினின் கரோலினா மரின், தாய்லாந்து வீராங்கனை பித்தயாபோர்ன் சைவானை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், கரோலினா 21-12, 21-16 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில், இந்திய வீரர் சவுரப் வர்மாவை, தைபே வீரர் வாங் ஜூ வெய் 15-21, 17-21 என்ற நேர் செட்டில் வீழ்த்தி சாம்பியனானார்.