காவல் நிலையத்தில் இருந்து தப்பியவர் பிடிப்பட்டார்

சென்னை

சென்னை, டிச.2: சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வட மாநில கொள்ளையர்கள் 3 பேர் தங்கியிருந்ததாக திருவல்லிக்கேணி போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், கடந்த பிப்ரவரி மாதம் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அவர்களை கைது செய்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைத்திருந்த நிலையில், பாஸ்கர் குமார் (வயது 25) என்ற கொள்ளையன் மட்டும் தப்பியோடியுள்ளார். இந்த நிலையில், பாஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பதுங்கியிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்த நிலையில், நேற்றிரவு அங்கு சென்ற போலீசார் பாஸ்கரை கைது செய்தனர்.