சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் அலுவலர் சம்பத்குமார் தலைமை தாங்கினார்

சென்னை

அம்பத்தூர், டிச..2: ஆவடி அடுத்த பூவிருந்தவள்ளி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் சம்பத்குமார் தலைமையில் நடை பெற்றது. ஆவடி அடுத்த பூவிருந்தவள்ளி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வட்டார போக்குவரத்து மோட்டார் வாக ஆய்வாளர்கள் இரவிகுமார்,விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பூவிருந்தவல்லி சரகத்திற்கு உட்பட்ட 25 க்கும் மேற்பட்ட தனியார் பள்ளியின் பள்ளி முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலர் சம்பத்குமார் பேசுகையில் அவரவர் பள்ளி வாகனத்தில் கண்கானிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும், முறையான ஆவணங்கள் வைத்திருக்கவேண்டும், வாகன ஓட்டுநர்கள் தங்களின் வாகன ஓட்டுநர் உரிமையை சரியாக பதிவு செய்திருக்கவேண்டும் மற்றும் பள்ளி நிர்வாகம் மிகுந்த கவனத்துடன் எவ்விதமான விபத்துக்கள் நடக்காவண்ணம் செயல்படவேண்டும் உள்ளிட்ட பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.