சென்னை, டிச.2: எம்.ஜி.ஆர். நகரில் மனைவி இறந்த துக்கம் தாளாமல் எலக்ட்ரிஷியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜிஆர் நகர் சித்தாலப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 34). இவர், எலக்ட்ரிஷினாக வேலை பார்த்துவந்தார். இன்று காலை இவரின் வீட்டின் கதவு வெகுநேரமாகியும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர். பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு தலைமையிலான போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது, ராஜா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து போலீசார் நடத்திய விசாரணையில், ராஜாவின் மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார் என்பதும், இந்த துக்கம் தாளாமலேயே ராஜா தற்கொலை செய்துக்கொண்டதாக தெரியவந்துள்ளது.