சுமன் ரங்கநாத் நடிக்கும் ‘தண்டுபாளையம்’

சினிமா

வெங்கட் மூவிஸ் புரொடக்சன் தயாரித்துள்ள படம் ‘தண்டுபாளையம்’. இப்படத்தை கே.டி. நாயக் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் வெங்கட், படத்தை வெளியிடும் விநியோகதஸ்தகர் பாலாஜி, பாடலாசிரியர் சொற்கோ, நடிகர் அபி சரவணன், இயக்குநர் மற்றும் நடிகர் தருண்கோபி, நடிகை சுமன் ரங்கநாத் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

விழாவில் நடிகை சுமன் ரங்கநாத் பேசுகையில், என்னோட முதல்படம் புதுப்பாட்டு. சென்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். இங்குள்ள சாப்பாடு, இங்குள்ள கலாச்சாரம் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்தக்கேரக்டர் ரொம்ப சேலன்ச்சிங்காக இருந்தது. எனக்கு வித்தியாசமான ரோல்களில் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை. எனக்கு ஒரு விஷன் இருக்கு என்றார்.