சசிகுமார் – நிக்கி கல்ராணி நடிக்கும் ராஜவம்சம்

சினிமா

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள படம் ‘ராஜ வம்சம்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ளார். இதில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். இந்த படத்தில் ராதா ரவி, தம்பி ராமைய்யா, விஜய குமார் , சதிஷ் ,மனோபாலா ரமேஷ் கண்ணா ,சிங்கம் புலி , யோகி பாபு ,கும்கி அஸ்வின் ,ஆடம்ஸ் , சரவணா சக்தி மணி சிலம்பம் சேதுபதி ,ரமணி , ராஜ் கபூர் ,தாஸ் , நமோ நாராயணன், சுந்தர், சாம்ஸ் , சமர் , ரேகா,சுமித்ரா , நிரோஷா ,சந்தான லட்சுமி ,சசிகலா ,யமுனா ,மணி சந்தனா ,மணி மேகலை,மீரா ,லாவண்யா ,ரஞ்சனா,,ரஞ்சிதா ,ரம்யா ,தீபா என 49 கலைஞர்கள் நடித்துள்ளனர். படத்திற்கு சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய, சாம்.சிஎஸ் இசை அமைத்துள்ளார். சுரேஷ் கலையமைக்க சபு ஜோசப் படத்தொகுப்பினை மேற்கொண்டுள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.