பொட்டு படத்தின் வெற்றிக்கு பிறகு ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது ஆண்ட்ரியா நடிக்கும் ‘கா’ படத்தை தயாரித்து வருகிறனர். கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைஃப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப் படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளது. சலீம்கோஸ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘கா’ என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும். படத்திற்கு அறிவழகன் ஒளிப்பதிவு செய்ய, அம்ரிஷ் இமைசயமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாஞ்சில் இயக்குகிறார்.
படம் குறித்து இயக்குனர் நாஞ்சில்கூறுகையில், மூணாரில் 30 நாட்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் இதுவரை யாரும் செல்ல முடியாத இடங்களுக்கு வன அலுவலகத்தில் அனுமதி பெற்று படப்பிடிப்பை நடித்தியிருக்கிறோம் என்றார்.