வாஷிங்டன், டிச.3: பூமியை நோக்கி 250 மீட்டர் விட்டத்தில் உள்ள எரிகல் ஒன்று வேகமாக வந்து கொண்டிருப்பதாக வானவியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த எரிகல் வரும் 6-ம் தேதி பூமியை நெருங்கும் என்றும், பூமியை இந்த எரிகல் தாக்கும் பட்சத்தில் சுனாமி ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானவியல் ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். மேலும் தரையில் விழும் பட்சத்தில் கட்டிடங்களில் தீப்பிடிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடலில் விழும்போது அதனால் அதிர்வு ஏற்பட்டு ராட்சத அலைகள் உருவாகி கரையை நோக்கி வரலாம் என்றும், தெரிவித்துள்ளனர்.