குடும்ப அட்டை மாற்றம்: அரிசி வழங்க ரூ.604 கோடி

சென்னை

சென்னை, டிச.3: சர்க்கரை ரேசன் அட்டையிலிருந்து அரிசி ரேசன் அட்டைக்கு மாறிய பயனாளிகளுக்கு அரிசி வழங்க 604 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தற்போது 10 லட்சத்து 19 ஆயிரத்து 491 குடும்ப அட்டைகள் சர்க்கரை அட்டைகளாக உள்ளன. சர்க்கரை அட்டை வைத்திருப்போர் அரிசி அட்டையாக மாற்றிக்கொள்ள கடந்த மாதம் 19 முதல் 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக உணவுத்துறை அறிவித்திருந்தது. அதன்படி 4 லட்சத்து 50 ஆயிரம் சர்க்கரை குடும்ப அட்டைகள் அரிசி அட்டைகளாக மாற்றம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு வழங்குவதற்காக மாதம் ஒன்றுக்கு 20 ஆயிரத்து 389 மெட்ரிக் டன் அரிசியை கூடுதலாக பெற்று வழங்கவும், அதற்காக மாதம் ஒன்றுக்கு 50 கோடி ரூபாய் வீதம் ஆண்டுக்கு 600 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.