சென்னை, டிச.4: வடமாநில வாலிபரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிவிட்டு, தப்பியோடிய 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர். திரிபுராவை சேர்ந்தவர் மாமூன் (வயது 22). இவர், சென்னை அண்ணாசாலையில் உள்ள ஜூஸ் கடையில் வேலை செய்துவந்தபோது, உடன் வேலை செய்யும் 4 பேர், மாமூனை வெளியில் அழைத்துக்கொண்டு செல்வதாக கூறி, பூந்தமல்லியில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

மாமூன் தன்னிடம் அவ்வளவு தொகை இல்லை என்று கூறவே, அவரை அடித்து உதைத்து மீண்டும் அண்ணா மேம்பாலத்திடம் மாமூனை இறக்கிவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து, மாமூன் அளித்த புகாரின்பேரில், உதவிகமிஷனர் முத்துவேல்பாண்டி மேற்பார்வையில், ஆயிரம்விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தலில் ஈடுபட்ட சஞ்சய் உட்பட 4 பேரை தீவிரமாக தேடிவருகின்றனர்.