புதுடெல்லி, டிச.4:  சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

அதன்படி, ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீரர் சவுரப் வர்மா 7 இடங்கள் முன்னேறி 29-வது இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் நடந்த சையத் மோடி சர்வதேச போட்டியில் இறுதிப்போட்டியில் பங்கேற்றதன் மூலம், தற்போது தரவரிசையில் சவுரப் முன்னேற்றம் கண்டுள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான சவுரப்பின் சிறந்த தரநிலை இதுவாகும்.

இதேபோல், இந்திய வீரர்கள் சாய் பிரனீத் 11-வது இடத்திலும், ஸ்ரீகாந்த் 12-வது இடத்திலும், காஷ்யப் 23-வது இடத்திலும், சமீர் வர்மா 26-வது இடத்திலும், பிரனாய் 27-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.
மகளிர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 6-வது இடமும், சாய்னா நேவால் 10-வது இடத்திலும் உள்ளனர். தரவரிசையில் டாப்-30 இடத்திற்குள் 6 வீரர்களை கொண்டுள்ள ஒரே நாடு இந்தியா என்பது பாராட்டுதலுக்குரியது.