கருத்து தெரிவிக்க இஸ்ரோ மறுப்பு ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டது தான் என விளக்கம்

TOP-6 சென்னை முக்கிய செய்தி

சென்னை, டிச.4: விக்ரம் லேண்டரின் சிதைவுகைளை தமிழக கணினி பொறியாளர் சண்முகசுப்ரமணியன் கண்டுபிடித்திருப்பது குறித்து இஸ்ரோ கருத்து தெரிவிக்க வில்லை. இஸ்ரோவால் ஏற்கெனவே இது கண்டுபிடிக்கப்பட்டது தான் என்று இஸ்ரோ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் செப்டம்பர் 7-ம் தேதி நிலவின் தென்பரப்பில் தரையிறங்க முயன்றபோது கீழே விழுந்து நொறுங்கியது.  இந்த விண்கலத்தின் இன்னொரு லேண்டரான ஆர்பிட்டர் நிலவின் மேற்பரப்பை சுற்றி வருகிறது. விக்ரம் லேண்டர் நொறுங்கி கிடக்கும் இடத்தை லேண்டர் படம் எடுத்து அனுப்பி இருக்கிறது. இந்த படங்கள் தெளிவற்றதாக இல்லை என்பதால் துல்லியமாக தெரியவில்லை.

இந்நிலையில் தரமணியில் கம்ப்யூடர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் சண்முகம் என்பவர் அக்டோபர் மாதத்தில் இந்த படங்களை துல்லியமாக ஆய்வு செய்து விக்ரம் லேண்டரின் சிதைந்த பாகங்களை அமெரிக்காவின் நாசா மற்றும் இஸ்ரோவிற்கு இ-மெயிலில் அனுப்பி வைத்தார். இந்த படங்களை நாசா உறுதிப்படுத்தி சண்முக சுப்ரமணியத்திற்கு பாராட்டு தெரிவித்தது. அக்டோபர் 3-ல் சண்முகசுப்ரமணியன் வெளியிட்ட டுவிட்டில் விக்ரம் லேண்டரின் சிதைந்த பாகங்கள் அது தரையிறங்க வேண்டிய இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் கிடப்பதாகவும், நிலவின் மணல் பகுதியில் புதைந்து இருக்கலாம் என்றும் கூறியிருந்தார்.

அக்டோபர் 18-ல் தனது கண்டுபிடிப்பு குறித்து நாசாவுக்கு மீண்டும் இ-மெயில் அனுப்பினார். 46 நாட்கள் ஆய்வுக்கு பிறகு நாசா அதை உறுதிப்படுத்தி இருக்கிறது. நாசா வெளியிட்ட அறிக்கையில் சண்முக சுப்ரமணியனால் அடையாளம் காணப்பட்ட சிதைவுகள், விக்ரம் லேண்டர் மோதிய இடத்தில் இருந்து வடமேற்கில் 750 மீட்டர் தொலைவில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுப்ரமணியன் அடையாளம் காட்டிய மின்னனு சிதைவான ‘பிக்சல்’ பிரகாசமானதாகவும், இது முதல்முதலில் கண்டறியப்பட்ட ஒன்றும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரோ தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்பட வில்லை. இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில் இதுகுறித்த விமர்சிக்க விரும்பவில்லை. ஏற்கெனவே இஸ்ரோவால் கண்டுபிடிக்கப்பட்டது தான் என்றார்.

சண்முகசுப்ரமணியன் கூறுகையில், நான் ராக்கெட் அறிவியல் படித்தவன் அல்ல, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவன், ராக்கெட் விடப்படும் போது எல்லாம் நான் பார்த்து இருக்கிறேன். வானவியலில் ஆர்வம் உண்டு என்பதால் நாள் ஒன்றுக்கு 7 மணி நேரம் வீதம் நான்கு நாட்கள் எனது லேப்டாப்பில் ஆய்வு செய்தேன். ஆரம்பத்தில் எனது நண்பர்கள் கூட நான் அடையாளம் காட்டிய விக்ரம் சிதைவை நம்ப மறுத்தார்கள். இஸ்ரோ அல்லது நாசாவால் செய்ய முடியாத எதையும் நான் செய்ய வில்லை என்றார்.