சென்னை, டிச.4: ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து சென்ற ஒன்றாம் வகுப்பு குழந்தையிடம் பாலியல் சில்மிஷம்செய்த ஆட்டோ ஓட்டுனரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாநகரைச்சேர்ந்த வீட்டு வேலை செய்யும் பெண்மணியின் 5 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 6மாதமாக ஓட்டோ ஒன்றை அமர்த்தி பள்ளிக்கு அனுப்பி வருகிறாராம்.

இந்தநிலையில் நேற்று தனது தாயிடம் சம்பந்தப்பட்ட உறுப்பில் வலி இருப்பதாக கூறி அழுதுள்ளார். உடனடியாக அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிறுமியை காண்பித்தபோது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்தது.  இதுகுறித்து ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் விசாரணை நடத்தி ஆட்டோ ஓட்டுனர் ஐசிஎபைச்சேர்ந்த ராஜா (வயது55) என்பவரை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர். சிறுமிகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் கவனமாக செயல்பட வேண்டும் என்று போலீசார் கூறுகின்றனர்.