உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது

தமிழ்நாடு

திருவள்ளூர், டிச.4: திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற கலெக்டர் கூறியதாவது:- தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக (27.12.2019 மற்றும் 30.12.2019) நடைபெறும் என அறிவிக்கப்பட்டதையொட்டி, திருவள்ளுர் மாவட்டத்தில் அடங்கிய 24 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 230 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 526 கிராம ஊராட்சி தலைவர் மற்றும் 3945 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

எனவே, ஊரகப் பகுதிகளுக்கு தேர்தல் நன்னடத்தை விதிகள் பற்றி நேற்று முதல் உடனடியாக நடைமுறைக்கு வந்தது . இவ்வாறு அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை .க.லோகநாயகி, திட்ட இயக்குநர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வை.ஜெயகுமார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்-உள்ளாட்சிப்பிரிவு) லதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.