விவசாயிகளுக்கான படம் ‘கடலில் கட்டுமரமாய்’

சினிமா

‘கடலில் கட்டுமரமாய்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படம் முழுக்க முழுக்க விவசாயிகளை மையப்படுத்தி எடுத்திருக்கிறார்கள். நடன இயக்குநர் ஸ்ரீதர் இப்படத்தைப் பற்றி கூறும்போது, ஒரு நல்ல கருத்துக்கு அனைவரும் ஆதரவு கொடுப்பார்கள் என்றார். அதேபோல், ‘ஜாகுவார்’ தங்கமும் வெளியிலிருந்து வரும் தயாரிப்பாளர்களுக்கு நாங்கள் எப்போதும் ஆதரவு கொடுப்போம். ‘தோல உரிச்சுப் போட்ருவேன் நிலத்துல கால வெச்சா’ என்று இப்படத்தில் இடம்பெற்றுள்ள வசனம் அனைத்து விவசாயிகளுக்கு பிடித்தமானதாக இருக்கும். இப்படம் நிச்சயம் வெற்றிபெறும் என்றார்.

மேலும், இப்படத்தைப் பற்றியும் இப்படத்தின் பாடல்களைப் பற்றியும் இந்நிகழ்ச்சியில் கதாநாயகி ரித்திகா, நடன இயக்குநர் ரமேஷ் ரெட்டி, கதாநாயகன் ரக்ஷன், தயாரிப்பாளர் முனுசாமி,இசையமைப்பாளர் ராம்ஜி,நடிகர் மகேந்திரன், இயக்குநர் யுவராஜ் முனிஷ், திமுக துணை பொது செயலாளர் வி.பி.துரைசாமி, நடிகர் அபிசரவணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியின் இறுதியில், இப்படத்தின் இசை தகடு வெளியிடப்பட்டது.