நடிகர் மம்மூட்டி மலையாள நடிகர் என்றாலும் அவரது நடிப்புக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மலையாளத்தில் அவர் நடித்துள்ள மாமாங்கம் என்கிற படம் வரும் 12ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. அதற்காக மம்மூட்டி மற்றும் படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மேடையில் பேசிய மம்மூட்டி, “தமிழ்நாட்டில் மேடையில் பேச பயமாக இருக்கிறது. சினிமாவில் சரியா தமிழ் பேசி விடுவேன். ஆனால் மேடையில் தப்பு தப்பா தான் பேசுவேன்” என கூறியுள்ளார். இந்த படத்திற்கு பிரபல இயக்குனர் ராம் தமிழில் வசனங்களை எழுதியுள்ளார்.