மலைக்கோட்டையில் 10-ம் தேதிமகா தீபம் மலை உச்சியில் கொப்பறையில் பிரம்மாண்ட திரி

தமிழ்நாடு

திருச்சி, டிச.4: கார்த்திகை தீப திருநாளையொட்டி திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் வருகிற 10-ந் தேதிமாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது.இதையொட்டி மலை உச்சியில் கொப்பரையில் பிரமாண்டமான திரி வைக்கப்பாட்டுள்ளது.
கார்த்திகை தீபம் வரும் 10ம்தேதி வருவதையொட்டி மலைக்கோட்டையின் தாயுமானசுவாமி கோவிலில் இருந்து உச்சிப் பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள உயரமான கோபுரத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட செப்புக் கொப்பரையில் பருத்தி துணியில் தயாரிக்கப்பட்ட திரி வைக்கப்பட்டு, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றை ஊற்றி மகா தீபம் ஏற்றப்படும். இந்நிலையில் கார்த்திகை தீபத்தையொட்டி 300 மீட்டர் பருத்தி துணியில் திரி தயாரிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது.

இந்த பணி முடிவடைந்து, பிரமாண்ட முறையில் தயாரிக்கப்பட்ட திரியை கோவில் ஊழியர்கள் கயிறு கட்டி கோபுரத்தின் உச்சியில் உள்ள செப்பு கொப்பரையில் வைக்க நேற்று மாலை தூக்கிச்சென்றனர். பின்னர், கோபுரத்தின் உச்சிக்கு கயிறு கட்டி எடுத்துச் சென்று செப்பு கொப்பரையில் திரியை வைத்தனர். பின்னர், அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 900 லிட்டர் அளவு கொண்ட இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றை கொப்பரையில் ஊற்றும் பணி தொடங்கியது. அவற்றை கொஞ்சம், கொஞ்சமாக கொப்பரையில் ஊற்றினார்கள். இந்த பணி ஒருநாள் விட்டு ஒருநாள் நடைபெறும். எண்ணெயை திரி நன்றாக உறிஞ்சிய பிறகு மகா தீபம் ஏற்றப்படும்.