புதுச்சேரியில் மழை பாதிப்பு: அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு

தமிழ்நாடு

புதுச்சேரி, டிச.4: புதுச்சேரியில் மழை வெள்ளம் பாதிப்பு குறித்து அமைச்சர் நமச்சிவாயம் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதிகாரிகளை வலியுறுத்தினார். புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் தொடர்ந்து பாகூர் ஏரி போன்ற ஏரிகள் நிரம்பியது. தொடங்குவர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மழையின் காரணமாக கால்வாய்கள் உடைப்பு இதுவரை நான்கு வீடுகளில் சுவர் இடிந்து விழுந்துள்ளது. மேலும் வரும் 11ம் தேதி வரை மழை பாதிக்காமல் இருப்பதற்காக தடுப்பு நடவடிக்கை எடுக்க உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

.இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர், உள்ளாட்சி துறை இயக்குனர், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மகாலிங்கம், புதுச்சேரி நகராட்சி மற்றும் பஞ்சாயத்து ஆணையர் மற்றும் வருவாய் துறையினர், மின்துறை தலைமை கண்காணிப்பு பொறியாளர் முரளி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மழையால் பாதிக்கப் பட்ட இடங்களில் அதிகாரிகள் உடனுக்குடன் சென்று பாதிப்புகளை நிவர்த்தி செய்ய வேண்டும். மின்சாரம், வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை அனைத்து துறை வீரர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.