1116 மாணவர்களுக்கு பட்டம், சான்றிதழ் 55 பேர் தங்கப்பதக்கம் பெற்றனர்

தமிழ்நாடு

காஞ்சிபுரம், டிச. 4: காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவ கல்லூரில் நடைபெற்ற 13வது பட்டமளிப்பு விழாவில் 1116 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். 55 மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்றனர். காஞ்சிபுரம் அடுத்து உள்ளது ஏனாத்தூர் கிராமத்தில் மீனாட்சி மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி நிறுவனம். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு குறைந்த கட்டணத்தில் ஏழை மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 13வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ கல்லூரி முன்னாள் துணை வேந்தர் சத்திய நாரயணமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவம் மற்றும் பல்வேறு துறைகளை நேர்ந்த 1,116 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

விழாவில் மினாட்சி மருத்துவ கல்லூரியின் நிறுவனர் ராதாகிருஷ்ணன், கல்லூரியின் ரெக்டர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆண்டறிக்கை சமர்பித்தனர். பட்டம் பெற்ற 1116 மாணவர்களில் பாத்திமா உள்பட 55 மாணவர்களுக்கு தங்க பதகங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவில் கல்லூரி பதிவாளர், பேராசிரியர்கள், பெற்றோர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.