புதுச்சேரி,டிச.4‘ புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக காலை 8 மணிமுதல் 10 மணிவரை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜிப்மர் நிர்வாக அலுவலகம் முன்பு தொழிற்சங்க தலைவர் தமிழ்வாணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பொதுச்செயலாளர் வேலு 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார் பொருளாளர் மாசிலா மணி, துணைத் தலைவர் தென்றல் அரசு உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்