திருவள்ளூர்,நவ. 4: நரிக்குறவர்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் நரிக்குறவர் காலனி சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

அப்போது அவர்கள் கூறியதாவது: தாங்கள் அனைவரும் கடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருவதால் குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள சான்றிதழ்கள் உள்ளநிலையில் வீட்டுக்கு பட்டா வழங்க கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இலவச வீட்டுமனைப்பட்டா இல்லாததால் அரசின் தொகுப்பு வீடுகள் கட்டிக் கொள்ள முடியாமலும் நலத்திட்ட உதவிகளை பெற முடியாமலும் அவதிப்பட்டு வரும் எனவே வீட்டு மனை பட்டா பெற்றுத்தர தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர் அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் மனு போட்டுவிட்டு சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.