மாதர் சங்க நடை பயணம்: நல்லகண்ணு பங்கேற்பு

சென்னை

தாம்பரம், டிச.4: வன்முறையற்ற தமிழகம்,,, போதையற்ற தமிழகம்,,, படைத்திட வேண்டும் என்ற வாசகங்களை ஏந்தி திருவண்ணாமலை மற்றும் வடலூரில் இருந்து சென்னை வரை தலைமை செயலகம் நோக்கி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி தலைமையில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது, திருவண்ணாமலை மாவட்டம், மற்றும் வடலூரில் இருந்து சென்னை தலைமை செயலகம் நோக்கி நடைபெற்ற பேரணி புதுமைப் பெண்களின் நடைபயணம் சென்னையின் நுழைவாயிலான தாம்பரம் வந்தடைந்த போது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் தாம்பரம் சண்முகம் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, முன்னாள் நீதியரசர் சந்துரு ஆகியோர் கலந்து கொண்டனர்.