செங்குன்றம், டிச.4: செங்குன்றம் அருகே உள்ள சோத்துபாக்கம் கிராமத்தில் வசிப்பவர் மோகன் (வயது 62). இவர் சமையல் வேலை செய்பவர் நேற்று மாலை தனது சைக்கிளில் தீர்த்த கரையம்பட்டு சாலையில் வரும்போது பின்னால் வந்த டாரஸ் லாரி மோகன் சைக்கிள் மீது மோதியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே மோகன் இறந்தார். தகவலறிந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு இன்ஸ்பெக்டர் கவுசல்யா, சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோகன் உடலை சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவமனைக்கு அனப்பி வைத்தனர். லா£ டிரைவர் நாமக்கல்லை சேர்ந்த பெரிய சாமி (வயது 46) என்பவரை கைது செய்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.