இந்திய விமானப்படை தளபதி உயிர் தப்பினார் இரண்டு பேர் படுகாயம்: மர்ம ஆசாமி தற்கொலை

TOP-3 இந்தியா முக்கிய செய்தி

ஹவாய், டிச.5: ஹவாய் கடற்படை தளத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இந்திய விமானப்படை தளபதி பதாரியா உயிர் தப்பினார் ஹவாய் துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 3 பேர் காயமடைந்தனர். அதில் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். கடற்படை சீருடை அணிந்து வந்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன் தனது தலையில் சுட்டு கொண்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கடற்படை தளம் மூடப்பட்டது.
இந்த சம்பவம் நடந்த போது, அமெரிக்காவின் ஹவாய், பேர்ல் துறைமுகத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ராணுவத் தளத்தில் இந்திய விமானப்படை (ஐஏஎப்) தலைவர் ஏர் மார்ஷல் ஆர்கேஎஸ் பதாரியா மற்றும் அவரது குழுவினர் கலந்து கொண்டனர்.

ஐஏஎப் தலைவர் உட்பட அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்டபோது அவர்கள் ராணுவத் தளத்தில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர். தளத்தின் மறுபுறத்தில் இந்த சம்பவம் நடந்ததால் பசிபிக் விமான தலைமை சிம்போசியமும் தொடர்ந்ததாக ஐஏஎப் அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்ட அறிக்கையில், ‘ஹவாயில் பியர்ல் ஹார்பர் கடற்படைதளத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த போது, இந்திய விமானப்படை தளபதி ஆர்கேஎஸ் பதாரியா அங்கு இருந்தார். எனினும் துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை. தளபதி உள்ளிட்ட அனைவரும் பத்திரமாக உள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.