சென்னை, டிச.5:மாதவரத்தில் சாலையை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத நபர் மீது தண்ணீர் லாரி மோதியதில், அவர் உயிரிழந்தார். இன்று அதிகாலை 3.30 மணியளவில் மாதவரம் ரவுண்டானா அருகே அடையாளம் தெரியாத 35 வயதுமிக்க நபர், சாலையை கடந்தபோது, மூலக்கடையிலிருந்து மாதவரம் நோக்கி அவ்வழியாக வந்த தண்ணீர் லாரி, வாலிபர் மீது மோதியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், அந்த வாலிபரை மீட்டு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி விபத்து ஏற்படுத்திய மாதவரத்தை சேர்ந்த லாரி டிரைவர் தமிழ்மணி (வயது 31) என்பவரை கைது செய்தனர்.