சென்னை, டிச.5: திருமுல்லைவாயிலில் வீட்டில் தனியாக இருந்த வாலிபர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.  அம்பத்தூர் அடுத்த திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை (வயது 32). வீட்டில் தனியாக இருந்த இவர், நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருமுல்லைவாயில் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தெரிந்த நபர் ஒருவருக்கு கொடுத்த ரூ.15 லட்சம் கடன் தொகை, திரும்ப கிடைக்காத ஆதங்கத்தில் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.