சென்னை, டிச.5: முகப்பேரில் பிரபல கல்வி நிறுவன அதிகாரி வீட்டில் 45 சவரன் நகை மாயமானது தொடர்பாக அவரது வீட்டில் பணிபுரியும் 2 பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். முகப்பேர் கிழக்கை சேர்ந்தவர் வேல்மோகன் (வயது 48). பிரபல கல்வி நிறுவனங்களின் அதிகாரியான இவரது வீட்டில் வைத்திருந்த தங்க நகைகளில் 45 சவரன் மாயமாகியுள்ளது. இது குறித்து, ஜெ.ஜெ.நகர் போலீசில் வேல்மோகன் அளித்த புகாரின்பேரில், கடந்த 9 ஆண்டுகளாக இவரது வீட்டில் வேலை பார்த்துவரும் 2 பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.