சென்னை, டிச.6: கஞ்சா கடத்திய ஒடிசாவை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்து, கஞ்சா பொட்டலங்கள், செல்போன்கள், ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். நாவலூர் சுங்கச்சாவடி அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில், அடையாறு துணை கமிஷனரின் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அந்த நபர் ஒடிசாவை சேர்ந்த ஜக்குபதான் (வயது 40) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா, 3 செல்போன்கள், ரூ.1,800 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், ஜக்குபதானை செம்மஞ்சேரி போலீசில் ஒப்படைத்தனர்.