சென்னை, டிச.6: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஆயிரம் விளக்கு பகுதி 118-வது வட்டத்தில் நடைபெற்ற அன்னதானத்தை தமிழ்நாடு பாடநூல் கழகத்தலைவர் பா.வளர்மதி தொடங்கி வைத்தார். 118-வது வட்டத்துணை செயலாளர் பச்சையப்பன் (எ) ஜிம்கிளி ஏற்பாட்டில் நடந்த இதில் அதிமுக இலக்கிய இணை செயலாளர் டி.சிவராஜ், துணை செயலாளர் இ.சி.சேகர், முன்னாள் கவுன்சிலர் ஆ.பழனி, நிர்வாகிகள் ரெட்சன் அம்பிகாபதி, மலர் மன்னன், வெங்கடேசன், முடியழகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.