சென்னை, டிச.6: சென்னை பெரம்பலூரில் ரெயில்வே தொழிற்சங்கத்தின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில், திருப்பூரை சேர்ந்த ரெயில்வே ஊழியர் செந்தில்குமார் பங்கேற்றுவிட்டு, கொரட்டூரில் உள்ள நண்பரை சந்தித்துவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு ரெயில் ஏறுவதற்காக, நேற்றிரவு 10 மணியளவில் கொரட்டூர் ரெயில் நிலையத்தில் சுவர் ஒன்றின்மீது அமர்ந்து காத்திருந்துள்ளார்.

அப்போது, அவ்வழியாக சென்ட்ரலில் இருந்து பெங்களூரு நோக்கி ரெயில் ஒன்று அதிவிரைவில் சென்றுள்ளது. இதனால், அதிவேகத்தில் வந்த காற்றினை சமாளிக்க முடியாமல், நிலைத்தடுமாறிய செந்தில்குமார் கீழே விழுந்துள்ளார். இதில், தலையில் படுகாயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.