சென்னை, டிச.7: நீர் மேலாண்மையில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாகவே திகழ்கிறது. நடந்தாய் வாழி காவேரி திட்டம் விரைவில் அமல்படுத்த உள்ளது. முதலமைச்சரின் இதுபோன்ற திட்டங்களால் விவசாயிகள் பெருமிதம் அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 89 அணைகளில் 238.58 டி.எம்.சி. நீரும், 14,098 பெரிய பாசன ஏரிகளில் 521 டி.எம்.சி. நீரும், ஆக மொத்தம் 759.58 டி.எம்.சி. நீரை தேக்கி வைக்கும் திறன்பெற்றுள்ளது.

இது தவிர, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கோயில்களின் கட்டுப்பாட்டில் உள்ள 26,000 ஏரிகள், 48,758 குளங்கள், ஊரணிகள், மற்றும் குட்டைகள் ஆகியவை நீரினை தேக்கி வைக்கப் பயன்படுகின்றன. தமிழகத்திலுள்ள 34 ஆறுகள் 17 பெரிய ஆற்று வடி நிலங்களாகவும், 127 உப வடிநிலங்களாகவும் வகைப்படுத்தப்பட்டு அணைகளை தூர்வாரி செப்பணிடுதல், புதிய தடுப்பணைகள், படுகை அணைகள் கட்டுதல், நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களை உருவாக்குதல், செப்பனிடுதல், பராமரித்தல் போன்ற பணிகளை தொடர்ந்து இவ்வரசு செய்து வருகிறது.

மேலும், நதிகளை இணைத்து அதிகப்படியான நீரை சேமிக்கவும், கடலில் கலக்கும் உபரி நீரை சேமிக்கவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நீர் மேலாண்மையில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாகவே திகழ்கிறது. இந்த இயக்கத்தின் ஒரு முக்கிய திட்டம் தான் குடிமராமரத்து திட்டமும், டெல்டா பகுதிகளில் சிறப்பு தூர் வாரும் பணிகள் திட்டமும் ஆகும். இத்திட்டம் விவசாயிகளிடயே மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

முதலமைச்சர் இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்த புதிய திட்டங்கள். ரூ.137.42 கோடியில் சேலம், திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் புதிய நீர்த்தேக்கம் ஏரி மற்றும் கசிவு நீர்குட்டை மற்றும் ரூ.505 கோடியில் நாகப்பட்டினம் மற்றும் கரூர் மாவட்டங்களில் புதிதாக கடை மடை நீரொழுங்கிகள் மற்றும் கதவணை, ரூ.632.87 கோடியில் 5 மாவட்டங்களில் வெள்ள உபரி நீரினை திருப்பும் பணிகள் மற்றும் ரூ.32.20 கோடியில் 5 மாவட்டங்களில் 8 இடங்களில் புதிய கால்வாய்கள்.

ரூ.32 கோடியில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 இடங்களில் தடுப்பணைகளும், ரூ.61 கோடியில் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் செயற்கை முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம்
ரூ.51.85 கோடியில் திண்டுக்கல் மாவட்டத்தில் பழனியில் 2 குளங்கள் புனரமைத்தல் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணி ஆகியவை செய்யப்படவுள்ளது. இவ்வாறு தமிழகத்தில் உள்ள நீர்த்தேக்கங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்கள் மற்றும் ஏரிகளை செவ்வனே புனரமைத்து அவற்றை உரிய தரத்துடன் பராமரித்து பாசன வசதி பெருக்கிட தமிழக அரசு எண்ணற்ற திட்டங்களை தீட்டி திறம்பட செயலாற்றி வருகிறது.

மழை, வெள்ளம், வறட்சி என இயற்கை சூழல் மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக்கும் நம்மாநிலத்தில் மழை நீரை சேமிப்பதிலும் சேமித்த நீரை திறம்பட பயன்படுத்துவதிலும் நீர் மேலாண்மையை மேம்படுத்துவதிலும் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. நடந்தாய் வாழி காவேரி திட்டம் மற்றும் நதிகள் இணைக்கும் திட்டம், ஆகியவை விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது.
தமிழகம் நீர்மிகை மாநிலமாக திகழ்வதற்கு மேலும் பல்வேறு திட்டங்களை அரசு உருவாக்கி செயல்படுத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.