லைகா சுபாஸ்கரனுக்கு பாராட்டு விழா மணிரத்னம், முருகதாஸ் பங்கேற்பு

சென்னை

சென்னை, டிச.7: ரஜினி, கமல், விஜய் படங்களின் தயாரிப்பாளரான சுபாஸ்கரனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது.இதற்காக சென்னையில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில் இயக்குனர்கள் மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சுபாஷ்கரனை கவுரவித்தனர். விஜய் நடிப்பில் வெளியான ‘கத்தி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் சுபாஸ்கரன் அல்லிராஜா. லைகா புரொடக்ஷன்ஸ் மூலம் பல்வேறு படங்களை இவர் தயாரித்துள்ளார். ரஜினி நடிப்பில் வெளியான ‘2.0’ படத்தைத் தயாரித்துள்ள இந்நிறுவனம், தற்போது அவர் நடிக்கும் ‘தர்பார்’ படத்தையும் தயாரித்து வருகிறது.

மேலும், கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ‘இந்தியன் 2’ படத்தையும் தயாரித்து வருகிறது. இந்நிலையில், மலேசியாவில் உள்ள ஏம்ய்ஸ்ட் பல்கலைக்கழகம், சுபாஸ்கரனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் உள்ள தமிழர்கள் குடியிருக்க நூற்றுக்கணக்கான வீடுகளையும், ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள சிறுவர்களுக்கு உதவி, விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள், குடிநீர்த் தட்டுப்பாடு உள்ள நாடுகளில் அதற்கான வசதிகளைச் செய்து கொடுப்பது என்று பல உதவிகளைச் செய்து வருகிறார் சுபாஸ்கரன். அவருடைய சமூக சேவைகளைப் பாராட்டி இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதற்காக சென்னையில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில் இயக்குனர்கள் மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சுபாஷ்கரனை கவுரவித்தனர்.