கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘குயின்’ இணையதளத் தொடர் டிசம்பர் 14 முதல் ஒளிபரப்பாகிறது. துணிச்சலான நடிகை, தைரியமான அரசியல்வாதி, இறுதி மூச்சுவரை சமரசங்களின்றி திகழ்ந்து மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகி உள்ள இந்த குயின் தொடரில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.

இந்த குயின் வெப் தொடரின் டிரைலர் கடந்த 5-ம் தேதி வெளியானது. இதையொட்டி ரம்யா கிருஷ்ணனின் 2-வது லுக் போஸ்ட்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
மேலும் இத்தொடரில் அனிகா சுரேந்திரன், அஞ்சனா ஜெயப்பிரகாஷ் மற்றும் இந்திரஜித் சுகுமார் ஆகியோர் முக்கிய வேடங்கிளில் நடிக்கின்றனர். ‘குயின்’ தொடரை தமிழ், இந்தி அல்லது பெங்காலியில் டிசம்பர் 14 முதல் எம்.எக்ஸ் பிளேயரில் இலவசமாகக் கண்டு மகிழலாம்,