ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. தன் திறமையை ஓவியங்கள் மூலம் நிரூபித்த இவர், தற்போதைய நடிப்பிலும் நிரூபித்திருக்கிறார். இவர் ஏற்கனவே ஆந்திராமெஸ் படத்தில் வில்லனாக நடித்து மக்களிடத்தில் மிகவும் பிரபலமானார். தற்போது கதிர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜடா’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு வில்லனின் கதாபாத்திரம் பார்க்கும் ரசிகர்கள் கோபப்பட வைப்பதுதான். அந்த கோபத்தை பார்ப்பவர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறார்.

இப்படம் குறித்து ஏ.பி.ஸ்ரீதர் கூறும்போது, ‘அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியிருக்கும் ஜடா திரைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் நடிக்க என்னை அணுகினார்கள். இப்பொழுது படத்தை பார்த்த அனைவரும் என்னை பாராட்டுகிறார்கள். என்னுடைய நடிப்புக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் படக்குழுவினருக்கே சேரும் என்றார்.