‘ஜீவி’ புகழ் வெற்றி நாயகனாக நடிக்க ஜெ.என். சினிமாஸ் சார்பில் பார்த்தசாரதி தயாரிக்கும் புதிய படத்தை குரு ராமானுஜம் இயக்குகிறார். இவர் கழுகு படத்தின் இயக்குனர் சத்ய சிவாவிடம் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்தவர். இப்படத்தை சமூக விழிப்புணர்வு மற்றும் கமர்ஷியல், சென்டிமென்ட் கலந்த திரில்லர் படமாக இயக்குகிறார். படத்தின் நாயகன் வெற்றிக்கு ஜோடியாக தியா மயூரிகா நடிக்கிறார். குணச்சித்திர பாத்திரத்தில் மாரிமுத்து நடிக்க, கே.ஜி.எஃப் படத்தில் வில்லனாக நடித்த ராமச்சந்திர ராஜு இப்படத்திலும் வில்லனாக நடிக்கிறார். மற்ற நடிகர்-நடிகைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் பூஜையுடன் நேற்று துவங்கியது. படத்திற்கு முருகேஷ் பாபு வசனம் எழுத, எஸ்.ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜா முகமது படத்தொகுப்பு மேற்கொள்ள, எஸ்.பத்மநாபன் கலை அமைக்கிறார்.