குழந்தைகளின் தன்னம்பிக்கை என்னை மெருகேற்றியது: சாக்ஷி

சினிமா

முழு நேர நடிப்பில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டாலும், தனக்கான நேரம் கிடைக்கும் சமயத்தில் சமுக அக்கரை கொண்ட நிகழ்வுகளிலும் நடிகை சாக்ஷி அகர்வால் பங்கேற்பார். சமீபத்தில் ஆட்டிசம் குறைபாடு கொண்ட குழந்தைகளின் இல்ல காப்பகத்திற்கு சென்று அவர்களுடன் சில நேரம் ஆடிப்பாடி மகிழ்ந்தார்.

அந்த குழுந்தைகளுடன் சிரித்து பேசி அவர்களையும் மகிழ்வித்து பின்னர் அவர்களுக்கு பொருட்களை பரிசளித்தார். இது குறித்து நடிகை சாக்ஷி அகர்வால் கூறுகையில், ‘குழுந்தைகளின் அன்பில் கரைந்து போனேன், இவர்களின் பொன் சிரிப்பும், தன்னம்பிக்கையும் என் வாழ்வை மேலும் மெருகேற்றியது’ என்றார்.