மும்பை, டிச.11:  கால்முட்டியில் உள்ள காயம் இன்னும் குணமடையாததால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவாண் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவுடன் டி20 மற்றும் ஒரு நாள் தொடர் போட்டிகளில் விளையாட உள்ளது. இன்றுடன் டி20 தொடர் நிறைவடைய உள்ள நிலையில், இதனைத் தொடர்ந்து, இரு அணிகள் இடையிலான ஒருநாள தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் விலகியுள்ளார். கால்முட்டியில் உள்ள காயம் இன்னும் குணமாகாததால், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளதாக கூறப்படுகிறது.அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் இந்திய அணியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.