சென்னை, டிச.11: இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளின் கிரிக்கெட் வீரர்கள் நாளை நண்பகல் 12.30 மணிக்கு விமானம் மூலம் சென்னை வருகிறார்கள்.

இரு அணிகளுக்கும் இடையே தற்போது டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மும்பையில் இன்று மூன்றாவது இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

சென்னையில் முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி வரும் 15-ம் தேதி அன்று நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்கான இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளின் வீரர்கள் தனி விமானம் மூலம் நாளை நண்பகல் 12.30 மணிக்கு சென்னை வருகிறார்கள். மொத்தம் 147 பேர் இந்த விமானத்தில் வருகின்றனர்.