பசுக்களில் காமதேனு, அசுரருள் பிரகலாதன், பறவைகளுள் கருடன், வீரர்களுள் ராமன், எழுத்துக்களில் ‘அ’ என்னும் முதல் எழுத்து, மாதங்களில் மார்கழி’ உயர்ந்தவை என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் குறிப்பிடுகிறார்.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் ஆண்டாளுக்கு மிக உகந்த மாதம் மார்கழி மாதம்.

பெண்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து குளித்து, வீட்டின் முன் அழகிய கோலங்களை போட்டு மார்கழி நன்னாளை வரவேற்பார்கள்.
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரத்தை இன்று நினைவு கூறுவது பொருத்தமாக இருக்கும்.

 

ஆண்டாள், அவளின் திருப்பாவை நாச்சியார் திருமொழி பற்றிய சிறு சிறு குறிப்புகளை நாளை முதல் காணலாம்.

 

ஸ்ரீவில்லிபுத்தூரில் திருப்பாவை பாசுரப் பட்டுப்புடவை அணிந்துள்ள உற்சவர் ஆண்டாள் மற்றும் அங்கு போடப்பட்டுள்ள வண்ணக் கோலங்களையும் காணலாம்.

 

திருப்பாவை பாசுரம் – 1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராட போதுவீர் போதுமினோ நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!