புவனேஷ்வர், டிச.17: ஒடிசா மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரம்மோஸ் ஏவுகணை என்பது நீர்மூழ்கிக் கப்பல்கள், கப்பல்கள், போர் விமானங்கள் அல்லது நிலத்திலிருந்து ஏவக்கூடிய ஒலியின் வேகத்தை விட அதிவேகமாக செல்லக்கூடிய ஒரு நடுத்தர தூர ராம்ஜெட் சூப்பர்சோனிக் ஏவுகணை ஆகும். இந்த ஏவுகணையின் தரம் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நிலப்பரப்பில் இருந்து கடலில் உள்ள இலக்குகளை தாக்கக்கூடிய பிரமோஸ் ஏவுகணை சோதனை ஒடிசாவின் சந்திப்பூர் ஏவுதளத்தில் இன்று காலை 8.30 மணியளவில் நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கடலில் நிறுத்தப்பட்டிருந்த இலக்கை பிரமோஸ் ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்த‌து.