திருவள்ளுவராக நடிக்கும் கிர்க்கெட் வீரர் ஹர்பஜன் சிங்

சினிமா

சமூக வலைதளப்படத்தில் திருவள்ளுவராக சிஎஸ்கே அணியில் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் நடிக்கிறார். இது இளைஞர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.
தற்போதுள்ள இணைய உலகில் இளைஞர்களின் விருப்ப யூடியூப் சேனலாக இருப்பது பிளாக் ஷீப். ஆர்.ஜே.விக்னேஷ், அரவிந்த் உள்பட பல இளைஞர்கள் அந்தச் சேனலை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

எல்லாருக்கும் நல்லாருக்கும் என்ற வாக்கியத்தோடு பிளாக் ஷீப் குழு தனது புதிய பயணத்தைத் துவங்கியுள்ளது.
புதிதாக 6+1 நிகழ்ச்சிகளை பிளாக் ஷீப் அறிமுகப்படுத்தியது. இதன் துவக்கவிழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பிளாக் ஷீப் தளத்தில் வெற்றிகரமாக இயங்கி வரும் நிகழ்ச்சிகளின் பங்கேற்பாளர்களை அழைத்து அறிமுகப்படுத்தி அசத்தினார்கள். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி தாணு, இயக்குநர்கள் சேரன், விஜய் சந்தர், அரசியல்வாதியும் நடிகருமான நாஞ்சில் சம்பத், நடிகர் ரியோ, நடிகரும் டாக்டருமான சேதுராமன், தொலைக்காட்சி புகழ் கோபிநாத், அசார் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு வாழ்த்தினார்.

பிளாக் ஷீப்பின் அடுத்த திரைப்படம் :-
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்த பிளாக் ஷீப், தற்போது புட் சட்னி புகழ் ராஜ்மோகன் இயக்கத்தில், தமிழ் சினிமாவில் வெற்றிகரமான விநியோகஸ்தராக தன் முத்திரையை பதித்த ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் முருகானந்தம் தயாரிப்பில், பர்ஸ்ட் காபி அடிப்படையில், பிளாக் ஷீப் புரொடக்ஷன்ஸ் மூலம் புதிய படம் தயாரிக்க இருக்கிறார்கள்.