சென்னை, டிச.17: உணவகம் வைப்பதற்காக கொடுக்கப்பட்ட ரூ.50 லட்சம் கடனை திருப்பி கேட்ட போது கடன்கொடுத்தவருக்கும், வாங்கியவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு குறித்து போலீசார்
விசார¬ ணநடத்தி வருகிறார்கள்.

சென்னை முகப்பேரை சேர்ந்தவர் பிரபாகரன், இவர், நுங்கம்பாக்கத்தில் டிராவல்ஸ் மற்றும் நிதி நிறுவனம் அமைத்து நடத்திவருகிறார். இவரிடம் நொளம்பூரை சேர்ந்த சக்திமுருகன், உணவகம் வைப்பதற்காக ரூ.50 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஓட்டல் தொழிலில் நஷ்டம் ஏற்படவே சக்திமுருகன் கடன் தொகையை திருப்பி தராமல் இழுத்தடித்ததாக தெரிகிறது.

இந்தநிலையில், பிரபாகரனின் அலுவலகத்திற்கு நேற்றிரவு வந்த சக்திமுருகனை, வீட்டிற்கு சென்று பேசலாம் என்று கூறி பிரபாகரன் தனது வீட்டிற்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார். அமைந்தகரை அருகே சென்றுக்கொண்டிருந்தபோது, தன்னை கடத்திசெல்வதாக சக்திமுருகன் சத்தம்போட்டுள்ளார்.

இருவரையும் அமைந்தகரை போலீசார் பிடித்து நுங்கம்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி தலைமையிலான போலீசார் இருவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.