விசாகப்பட்டினம், டிச.18:  விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கிய 2வது ஒருநாள் போட்டியில் 160 ரன்களை கடந்தும் இந்திய அணியின் தொடக்க வீரர்களை வீழ்த்த முடியாமல் விண்டீஸ் அணி விழிபிதுங்கியுள்ளது.

இந்தியா-விண்டீஸ் அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. இதில், டாஸ் ஜெயித்த விண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா (78), கே.எல். ராகுல் (83) ஆகியோர் வலுவான தொடக்கம் அளித்தனர். 29 ஓவர்கள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 167 ரன்கள் சேர்த்துள்ளது. ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் விண்டீஸ் அணி திணறிவருகிறது.