10 ஆண்டுகளாக கணவனை பிரீசரில் வைத்த மனைவி

உலகம்

நியூயார்க், டிச.18: அமெரிக்காவின் உடா மாநிலத்தின் டூயெலி நகரில் இறந்து போன கணவரின் உடலை மனைவி 10 ஆண்டுகளாக பிரீசரில் வைத்து பாதுகாத்து வந்துள்ளார்.
இந்த நகரைச் சேர்ந்தவர் ஜீன் சவுரோன்-மாதர்ஸ் (வயது 75). இவரது கணவர் பால் எட்வர்ட்ஸ் ஓய்வு பெற்ற படைவீரர் ஆவார்.

இவர் திடீரென இறந்து விட்டார். இது தொடர்பான விசாரணையில் வீட்டை சோதனை செய்ததில், பால் எட்வர்ட்சின் உடல் அங்கிருந்த பிரீசரில் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலுடன் ஒரு கடிதமும் கண்டெடுக்கப்பட்டது.

2008-ம் ஆண்டில் மரணமடைந்த அவரது உடல் பத்து ஆண்டுகளாக பிரீசரில் வைக்கப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.