குடியுரிமை சட்டம்: சீனா அதிரடி கருத்து

உலகம்

புதுடெல்லி, டிச.19: குடியுரிமைச் சட்டம், இந்தியாவின் உள்நாட்டு விஷயம் என சீனத் தூதர் ஜா லியோ தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினையை இந்தியா மட்டுமே தீர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., இது இந்தியாவின் உள் விஷயம். இது குறித்து நாங்கள் எதுவும் பேச விரும்பவில்லை.
இது உங்கள் நாடு, உங்கள் சொந்த பிரச்சினைகளை நீங்கள் தான் தீர்க்க வேண்டும்,’ என்று ஒரு நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவும் சீனாவும் ஒரு சிறந்த உறவைப் பகிர்ந்து கொள்கின்றன, பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா மற்றும் சீனா ஒன்றுசேர்ந்து போராட வேண்டிய நாள் இது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.