பாக் அத்துமீறல்: இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல்

TOP-6 இந்தியா

ஸ்ரீநகர், டிச.19: ஜம்மு-காஷ்மீரில் இந்திய நிலைகளைக் குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம்
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

இன்று பூஞ்ச் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டியுள்ள இந்திய நிலைகளைக் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று காலை 7.15 மணியளவில் இருந்து தாக்குதல் நடைபெற்று வருவதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிறிய ஆயுதங்கள் மற்றும் மோட்டார் குண்டுகளை வீசி பாகிஸ்தான் துருப்புக்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளன. இதற்கு இந்திய தரப்பில் இருந்தும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.